79வது சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி
புதுடெல்லி: நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தொடர்ந்து 12வது முறையாக தேசிய கொடி ஏற்றினர் . நாட்டின் 79வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார். தொடர்ச்சியாக 12வது முறையாக கொடியேற்ற இருக்கிறார். நாட்டின் முதல் பிரதமர் நேரு டெல்லி செங்கோட்டையில் 17 முறை தேசிய கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்தி உள்ளார்.
அவருக்கு அடுத்தபடியாக நேருவின் மகள் இந்திராகாந்தி மொத்தம் 16 முறை தேசிய கொடி ஏற்றினாலும், தொடர்ச்சியாக 11 முறைதான் தேசிய கொடி ஏற்றினார். தற்போது அந்த சாதனையை பிரதமர் மோடி முறியடித்து நேருக்கு அடுத்தபடியாக அதிக முறை, அதாவது 12 முறை தொடர்ச்சியாக டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய பெயரை பெற உள்ளார்.
இந்த விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடியை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இணையமைச்சர் சஞ்சய் சேட் மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் வரவேற்கிறார்கள். பின்னர் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்