பொறியியல் படிப்புகளில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வத்தால் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
சென்னை: பிஇ ,பிடெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு ஏற்கனவே முடிவடைந்த நிலையில்.துணை கலந்தாய்வு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது.
துணை கலந்தாய்வுயில் பங்கேற்ற 7,964 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கப்பட்டதை அடுத்து இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 1.53 லட்சமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டைவிட 30,000 மாணவர்கள் இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த ஆண்டு 29 பொறியியல் கல்லூரிகள் மட்டும் முழுமையாக நிரம்பிய நிலையில் இந்த ஆண்டு 46 பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. மொத்தம் உள்ள 425 பொறியியல் கல்லுரிகளில் 182 கல்லுரிகளில் 90%இடங்களுக்கு மேல் நிரம்பி உள்ளது.
பொறியியல் படிப்புகளில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆர்வமே மாணவர் சேர்க்கைக்கு அதிகரிப்புக்கு கரணம் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளார். குறிப்பாக மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பாடப்பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியதால் அத்துறையில் 83 % இடங்கள் நிரம்பியிருப்பதாகவும் கல்வியாளர்கள் கூறியுள்ளார்.