யமுனை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடரும் மழை: ஆக்ராவில் பல்வேறு இடங்களில் தேங்கியுள்ள மழை நீர் வெள்ளம்
டெல்லி: வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக கங்கை, யமுனை ஆறுகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அவற்றின் கரைகளில் உள்ள கிராமங்கள், நகரங்களில் வெள்ளம் சூழந்து இருக்கிறது. யமுனை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், டெல்லியில் கரையோர வாழும் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றன. குறிப்பாக ஆக்ராவில் சில கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
ஆக்ராவில் அமைத்துள்ள தாஜ்மஹால் முன்பு வெள்ளம் தேங்கி நிற்கிறது. கைலாஷ் கிராமங்களில் மழை நீர் சூழ்ந்ததால் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. யமுனை ஆற்றில் பழைய இரும்புப் பாலத்தைத் தொட்டபடி ஆபாய அளவை தாண்டி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. குஜராத் உள்ள பனஸ்கந்தா நகரில் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
குஜராத்தில் உள்ள காந்திதாம் ரயில் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்துள்ளனர். இங்க நிறுத்தி வைக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கின, யமுனை மட்டுமல்லாது கங்கை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், உத்தரப்பிரதேசம் உள்ள பிரயாக்ராஜ் நகரத்தில் நூற்றுக்கணக்கான வீடுகள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
சிலர் தங்கள் உடைகளை எடுத்துக்கொண்டு அண்டை கிராமங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளன. இதனால் மாணவர்கள் தங்களின் பள்ளிக்கூடங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களில் பிரயாக்ராஜ் நகரில் 5 முறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என குறிப்பிடத்தக்கது. பஞ்சாப், அரியானா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பதிவாகி வருகிறது. குறிப்பாக நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் பஞ்சாப் மாநிலம் பெரும் சேதத்தை சந்தித்து வருகிறது.