தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

நீட் தேர்வில் மாநில அளவில் சாதனை கிருஷ்ணகிரி மாதிரி பள்ளி மாணவருக்கு ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை

*மதியழகன் எம்எல்ஏ வழங்கினார்

கிருஷ்ணகிரி : நீட் தேர்வில் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மாதிரி பள்ளி மாணவருக்கு பர்கூர் எம்எல்ஏ மதியழகன் ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஒன்றியம் பண்டசீமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (18). ஸ்வீட்ஸ் மாஸ்டரான இவரது தந்தை மாதப்பன், கடந்த 11ம் ஆண்டுக்கு முன்பு விபத்தில் இறந்தார்.

தாய் கோகிலா மற்றும் உறவினர்கள் அரவணைப்பில் வளர்ந்த சதீஷ்குமார் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பண்டசீமானூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயின்றுள்ளார். தொடர்ந்து சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்பு முடித்துள்ளார்.

பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சி பெற்ற அவர், கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளியில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மேல்நிலை படிப்பை தொடர்ந்தார். கடந்த, 2024ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில் 558 மதிப்பெண்கள் பெற்றார். அதே ஆண்டு நடந்த நீட் தேர்வில் 461 மதிப்பெண்கள் பெற்றார்.

இதையடுத்து, அவருக்கு பல் மருத்துவருக்கான பி.டி.எஸ்., சீட் கிடைத்தது. இருப்பினும் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் மீண்டும் அதற்காக ஒரு ஆண்டு படித்தார். நடந்து முடிந்த நீட் தேர்வில் 563 மதிப்பெண்கள் பெற்றதுடன், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத இட உள்ஒதுக்கீட்டில் மாநில அளவில் 2வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

பர்கூர் தொகுதியைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்ததை அறிந்த பர்கூர் எம்எல்ஏவும், கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான மதியழகன், நேரடியாக அவரது வீட்டிற்கு சென்று மாலை அணிவித்து, கலைஞர் குறித்த புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார்.

மேலும், ஊக்கத்தொகையாக தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரம் வழங்கி பாராட்டினார். அப்போது மாவட்ட அவைத்தலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர் அறிஞர், பொதுக்குழு உறுப்பினர் நாகராசன், லயோலா ராஜசேகர் உள்ளிட்ட திமுகவினர் உடனிருந்தனர்.

ஒரப்பம் அரசு பள்ளி மாணவர் 8ம் இடம் பிடித்து சாதனை

கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் நித்திஷ் (18). இவர், பர்கூர் ஒன்றியம் ஒரப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த 2024ம் ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 525 மதிப்பெண் பெற்றார்.

அதே ஆண்டு நடந்த நீட் தேர்வில் 255 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவ சீட் கிடைக்கவில்லை. தொடர்ந்து தனியார் நீட் பயிற்சி மையத்தில் படித்த அவர், நடப்பாண்டில், 527 மதிப்பெண்கள் பெற்று அரசுப்பள்ளி மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 8ம் இடம் பிடித்துள்ளார்.

சாதனை படைத்த மாணவரை பள்ளிக்கு வரவழைத்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டி, தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.