தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விரல் நுனியில் உலகை அறியும் நவீன உலகில் வாழ்க்கை கல்வியில் தடுமாறும் மாணவர்கள்: பரிதவிக்கும் பெற்றார்; மருத்துவர் ஆலோசனை

நாகரிக வளர்ச்சி என்பது முன்பெல்லாம் 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது அதற்கு மேல் சில ஆண்டுகளை எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் மாற்றங்களை நாம் பார்த்து வந்தோம். ஆனால் தற்போது வருடத்திற்கு ஒரு மாற்றம் என வாழ்வியல் நடைமுறைகள் அதிவேகமாக மாறிக்கொண்டே வருகிறது. அந்த காலத்தில் இருந்த நடைமுறைகள் அனைத்தும் மாறி தற்போது பெற்றோரும், குழந்தைகளுக்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ள தொடங்கிவிட்டனர்.

Advertisement

முன்பெல்லாம் பெற்றோர் எதை சொல்கிறார்களோ அதைத்தான் குழந்தைகள் கேட்டு வந்தனர். ஆனால் இன்று காலம் மாறி குழந்தைகள் என்ன சொல்கிறார்களோ அதை பெற்றோர் கேட்டு தங்களை மாற்றிக் கொள்ள தொடங்கி விட்டனர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு நாகரிக வளர்ச்சி மற்றும் இணையதள பயன்பாடு கல்வியில் முன்னேற்றம் போன்ற பல்வேறு வாழ்வியல் மாற்றங்களால் இளைய தலைமுறையினர் தங்களை மிக வேகமாக மாற்றிக் கொண்டே செல்கிறார்கள்.

இதில் பல விஷயங்களை அவர்கள் மறந்தும் இருக்கிறார்கள். இதனை அவ்வப்போது பெற்றோர் நினைவு படுத்தினாலும், இவை எலலாம் ஒரு பெரிய விஷயமா என கேட்டுவிட்டு மீண்டும் அவர்கள் தங்களது போக்கில் சென்று விடுகிறார்கள். பெற்றோர் எவ்வளவுதான் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்தாலும் ஒரு வயதுக்கு மேல் குழந்தைகளை பெற்றோர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. அதுவும் சமூக வலைதளங்களின் அபரிவிதமான வளர்ச்சியால் குழந்தைகள் பல்வேறு விஷயங்களை சிறுவயதிலேயே தெரிந்து கொள்கின்றார்கள். இதனை பெற்றோர் எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள், குழந்தைகளை அவர்கள் எவ்வாறு பயிற்றுவிக்கிறார்கள் என பல்வேறு பிரச்னைகளை தொடர்ந்து பெற்றோர் சந்தித்து வருகிறார்கள்.

20 வருடங்களுக்கு முன்பு செல்போன் வராத காலகட்டத்தில் படித்து தற்போது பெற்றோர்களாக உள்ள நபர்கள் இந்த தலைமுறையினரை கண்டு அவர்களை கையாளுவதில் இவர்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் வைத்திருக்கும் பெற்றோர் இந்த விஷயத்தில் குழந்தைகளை கண்டிக்கவும் முடியாமல், தங்களை மாற்றிக் கொள்ளவும் முடியாமல் தவித்து வருகின்றனர்.

கல்வி மட்டுமே இதற்கு தீர்வாகாது என்று தெரிந்தும், பல்வேறு மாற்று வழிகளை பெற்றோர் தேடி செல்கின்றனர். அந்த வகையில் கல்வி சாரா வாழ்வியல் நடைமுறைகள் குறித்து குழந்தைகளுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலரும் தற்போது இதுகுறித்த தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து கொளத்தூரை சேர்ந்த மாணவர் மனநல ஆலோசகரும், கல்வியாளருமான வனிதா கூறியதாவது:

இந்த மாதம் குழந்தை தினம் வரவுள்ளது. இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவின் எதிர்காலம் என ஜவர்கலால் நேரு கூரிய வார்த்தைகள் என்றும் நமது நினைவில் நிற்கும். குழந்தைகளாக இருக்கக்கூடிய வருங்கால தலைவர்களை இன்று நாம் எவ்வாறு பயிற்று வைக்கிறோம் என்பதை பார்க்க வேண்டும். கல்வி என்பது ஒருங்கிணைந்த நிகழ்வு மதிப்பெண்களை உருவாக்குகின்ற இயந்திரங்களை போல மாணவர்களை கையாளக் கூடாது.

கல்வி என்பது சமுதாயம், தனிமனித ஒழுக்கம், சமுதாயம் நம் மீது வைத்துள்ள நம்பிக்கை இவை மூன்றும் இணைந்த ஒரு முக்கோணம் தான் கல்வி என பார்க்க வேண்டும். தற்போது பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கல்வியோடு சேர்ந்த தனிமனித ஒழுக்கம், சமுதாய ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுத் தர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

எப்போதுமே பரிணாம வளர்ச்சி எப்படி இருக்கும் என்று பார்த்தால் ஒரு தடவை நாம் ஒரு அறிவியல் வளர்ச்சியை எட்டி விட்டோம் என்றால், அதன் பிறகு நம்மால் கடந்த காலத்திற்குள் போக முடியாது. உதாரணமாக செல்போன் இல்லாமல் இருந்த காலம் பொற்காலம் எனக்கூறுவோம். ஆனால் தற்போது நம்மால் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. எனவே வாழ்க்கை என்பது சவால்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்ற திறனை வளர்த்துக் கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

சமுதாயம் ஒரு தனி மனிதனுக்கு தரக்கூடிய மிகப்பெரிய நம்பிக்கை கல்வி என்றால் பதிலுக்கு அந்த மனிதன் சமுதாயத்திற்கு தரக்கூடிய விஷயம் அவனது திறன் மற்றும் பொறுப்புக்கள் மட்டும்தான். கல்வி என்பது வெளியில் இருந்து உள்ளே வருவது அதை நாம் பெற்றுக் கொண்டு நம்மிடம் உள்ள நிறைய நல்ல விஷயங்களை வெளியே காட்ட வேண்டும்.

உதாரணத்திற்கு இன்றைய கல்வி எப்படி உள்ளது என்றால் பொறியியல் படிப்பு படித்த மாணவர்களுக்கு கூட ஒரு சாதாரண காஸ் சிலிண்டரை கழட்டி மாற்ற தெரிவதில்லை. ஒரு காஸ் சிலிண்டர் லீக் ஆகுது என்றால் உடனடியாக பதற்றம் அடைகிறார்கள். அந்த நேரத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து கூட இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு தெரிவதில்லை. அந்த நேரத்தில் ஏற்படும் பதற்றத்தை தாண்டி தானும் தப்பிக்க வேண்டும், தன்னுடன் உள்ள நபர்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அறிவாற்றல். இதற்கு அன்றாட வாழ்விற்கு தேவையான பயிற்சிகளை குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர் தான் தர வேண்டும்.

உதாரணத்திற்கு தினமும் வீட்டில் செய்யும் வேலைகளை குழந்தைகள் சற்று வளர்ந்த உடன் அவர்களுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும். எனது குழந்தையை செல்லமாக வளர்த்து விட்டேன் என்று கூறாமல் சிறு சிறு வேலைகளை கூட அவர்களுக்கு கற்றுத் தருவதன் மூலம் அந்த வேலையில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா என அவர்கள் கற்றுத் தேர முடியும்.

உதாரணத்திற்கு வீட்டில் காஸ் சிலிண்டர் மாற்றுவது, வீட்டை சுத்தம் செய்வது, என்றாவது ஒருநாள் வீட்டில் உள்ள நபர்களின் துணிகளை துவைப்பது போன்றவற்றை ஒரு 10வது அல்லது 12வது படிக்கும் குழந்தைகள் செய்யும் போது இந்த வேலைகளை செய்யும் போது இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்பதை அவர்கள் அறிந்துகொள்ள முடியும். வீட்டில் குழந்தைகள் சாப்பிடும் போது சாம்பார் சரியில்லை, சட்னி சரியில்லை எனக் கூறுவார்கள். ஆனால் அதை சமைப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும், எந்தெந்த பொருட்களை பயன்படுத்துகிறோம் என்று கூட குழந்தைகளுக்கு தெரியாது சமையல் என்பதும் ஒரு விதமான கலை தான் எனவே பெற்றோர் குழந்தைகளுக்கு அதையும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

அதே நேரத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஆண் குழந்தைகளாக இருந்தால் பெண்களிடம் எவ்வாறு பழக வேண்டும், பெண் பிள்ளைகளாக இருந்தால் ஆண்களிடம் எவ்வாறு பழக வேண்டும் என உணர்வு ரீதியான விஷயங்களையும் பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும்.

அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு ஆண் தோழர்களிடம் எவ்வாறு பழக வேண்டும், எது கண்ணியம், எது நாகரீகம் என்பதை பெற்றோர் கற்றுத் தர வேண்டும். கண்ணியத்துடன் நாம் செயல்படும்போது இந்த சமூகத்தில் நாம் நாகரிகத்துடன் வாழ்கிறோம் என கூறிக் கொள்ளலாம். எனவே நாகரிக வளர்ச்சி என்ற பெயரில் அனைத்திற்கும் நாம் சரி எனக்கு கூறுவது சரியாக இருக்காது.

எந்தப் பக்கத்திலிருந்து கத்தி வந்தாலும் அதை கையாள தெரிந்தவன் தான் உண்மையான வீரன். அது போலத்தான் எந்த பிரச்னை வந்தாலும் வாழ்க்கையில் அதை எதிர்கொள்ள குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும். குறிப்பாக, சாதாரண விஷயத்திற்கு கூட அதிகம் கோபப்படுவது, தோல்விகளை ஏற்க முடியாமல் விபரீத முடிவு எடுப்பது, துன்பங்களை கடந்து செல்ல முடியாமல் தவிப்பது, மன அழுத்தம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.

இன்றைய தேதிக்கு தங்களுடைய உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கூட குழந்தைகள் வெளிக்காட்டி சொல்லத் தெரியாத வகையில் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு ஒவ்வாத உணவுகளை சாப்பிடும் போது உடலில் ஏற்படும் மாற்றங்களை கூட குழந்தைகளுக்கு வெளியே சொல்ல தெரிவதில்லை. இன்டர்நெட் விஷயங்களில் குழந்தைகள் அதிக அளவில் ஆர்வமுடன் இருப்பதால் உடல் உபாதைகளை கூட வெளியே சொல்ல அவர்களுக்கு தெரியவில்லை என்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இன்றைய காலகட்ட குழந்தைகள் உள்ளனர்.

தொலைதொடர்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களில் இன்றைய குழந்தைகளின் முழுநேர கவனம் இருப்பதால் தங்களது உடல்நிலை குறித்த மாற்றங்களை கூட அவர்களால் கண்டுகொள்ள முடிவதில்லை. இதனை எல்லாம் பெற்றோர்களும் கவனிக்க வேண்டும். நல்ல படிப்பு குழந்தைகளுக்கு கொடுத்து அதன் மூலம் பணத்தை அவர்கள் சம்பாதித்தாலும், உலகில் விலை மதிப்பு இல்லாத பொருட்கள் சில உள்ளன. அது அன்பாக இருக்கலாம், நேர்மையாக இருக்கலாம், நம்பிக்கையாக இருக்கலாம், பாதுகாப்பாக இருக்கலாம். இவ்வாறு கண்ணுக்குத் தெரியாத இது போன்ற விஷயங்களை தங்களது குழந்தைகளுக்கு பெற்றோர் கற்றுத் தர வேண்டும்.

100 கோடி ரூபாய் கொடுத்து ஒரு சொகுசு காரை பணம் உள்ள யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் மனம் இருந்தால் தான் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய முடியும் என்ற ஒரு விஷயத்தை பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கற்றுத் தர வேண்டும் அவ்வாறு கற்றுத் தரும்போது வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை முறை நன்றாக இருக்கும் இதன் மூலம் சமுதாயமும் மேம்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முக்கியத்துவம்

சவால்களை சமாளித்தல்: வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகளைச் சமாளிக்கவும், மன உறுதியை வளர்க்கவும் உதவுகிறது.

திறன்களின் வளர்ச்சி: மன, சமூக மற்றும் உடல் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவுகிறது.

நம்பிக்கையான முடிவுகள்: வாழ்க்கையிலும், கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையிலும் தகவலறிந்த முடிவுகளை எடுக்க மாணவர்களை அதிகாரம் அளிக்கிறது.

சமூகத் திறன்கள்: குழுப்பணி, தலைமைத்துவம் மற்றும் மற்றவர்களுடன் திறம்பட தொடர்பு கொள்ளுதல் போன்ற திறன்களை வளர்க்கிறது.

வேலைவாய்ப்பு: வலுவான தலைமைத்துவம் மற்றும் தொடர்பு திறன்கள் போன்ற தேவையான திறன்களைக் கொண்டிருப்பதால், வேலை சந்தையில் மாணவர்களுக்கு ஒரு போட்டித்தன்மையை வழங்குகிறது.

குற்றங்களைத் தவிர்த்தல்: நீதி போதனைகள் மற்றும் கதைகள் மூலம், இளம் பருவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க உதவலாம்.

வாழ்க்கைக் கல்வியை எவ்வாறு கற்பிப்பது

பாடத்திட்டத்தில் இணைத்தல்: கல்வி நிறுவனங்கள் தங்கள் பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன்களைச் சேர்க்கலாம்.

கதை மூலம் கற்பித்தல்: நீதி கதைகள் மற்றும் மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களில் உள்ள வாழ்க்கை முறைகள் மூலம் கற்பிக்கலாம்.

பயிற்சி மற்றும் கருத்தரங்குகள்: மாணவர்களுக்குத் தேவையான பயிற்சி திட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்யலாம்.

கூடுதல் செயல்பாடுகள்: விளையாட்டுகள், கலை மற்றும் பிற படைப்புத் திட்டங்களில் ஈடுபட மாணவர்களை ஊக்குவிக்கலாம்.

Advertisement