நீதிமன்றத்தில் கொலை குற்றவாளிகளை போட்டோ எடுக்க முயன்ற மார்க்சிஸ்ட் பெண் பிரமுகருக்கு ஒரு நாள் சிறை
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூர் அருகே டிஒய்எப்ஐ தலைவர் தனராஜ் கொல்லப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜவை சேர்ந்த 19 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை நேற்று போலீசார் தளிப்பறம்பு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோது அங்கு இருந்த பையனூர் நகரசபை முன்னாள் துணைத் தலைவியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவியுமான ஜோதி, குற்றவாளிகளை தன்னுடைய செல்போனில் போட்டோ எடுக்க முயன்றார்.
Advertisement
அதை கவனித்த நீதிபதி பிரசாந்த், உத்தரவின் பேரில் போலீசார் ஜோதியிடம் இருந்து செல்போனை கைப்பற்றி அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். நீதிபதி அவருக்கு ரூ. 1000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் நீதிமன்றம் கலையும் மாலை 5 மணி வரை அவரை காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.
Advertisement