தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அக்டோபர் 1ம் தேதி முதல் அமல் இறக்குமதி மருந்துகளுக்கு 100% வரிவிதிப்பு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த அதிரடி, இந்திய நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும்

வாஷிங்டன்: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு இந்திய மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற டிரம்ப், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

Advertisement

இதையடுத்து, உலக நாடுகள் விதிக்கும் வரிக்கு ஏற்ப பதில் வரி விதிக்கப்படும் என்று கூறிய அவர், அதற்கான பட்டியலை வெளியிட்டார். முதற்கட்டமாக இந்திய பொருட்கள் மீது 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 7ஆம் தேதி அமலுக்கு வந்தது. அத்துடன், ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25% வரி விதித்தார். இது ஆகஸ்ட் 27ஆம் தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம், இந்திய பொருட்கள் மீது 50% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக இந்தியா பயன்படுத்தும் ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத்திற்கு அமெரிக்கா கட்டுப்பாடுகளை விதித்தது. அந்த துறைமுகத்தை இந்தியா பயன்படுத்த முடியாத அளவுக்கு தடை விதித்து உள்ளது. மேலும் அமெரிக்காவில் எச்1பி விசாவில் பணிபுரியும் இந்திய இன்ஜினியர்களை குறிவைத்து எச்1பி விசா கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி டிரம்ப் அறிவித்தார்.

அதை தொடர்ந்து அமெரிக்காவுக்கு அதிக அளவு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பிராண்டு மற்றும் உரிமம் பெற்ற மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என்பதை அறிவித்துக் கொள்கிறேன்.

மருந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக் கூடங்களை அமெரிக்காவில் நிறுவ வேண்டும். அது கட்டுமானத்தில் இருந்தால் எந்தவித வரி விதிப்பு நடவடிக்கையும் இருக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு இந்த வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல சமையலறை கேபினட்கள், குளியலறை பொருட்களுக்கு 50 சதவீதமும், கனரக லாரிகள் மற்றும் அவற்றின் உதிரிபாகங்களுக்கு 25 சதவீதமும், மெத்தை வசதியுடன் கூடிய தளவாடங்களுக்கு 30 சதவீதமும், பர்னிச்சர்களுக்கு 30 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப்படும்.

வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இந்த பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதுதான் இந்த வரி விதிப்புக்கு காரணம். நமது தேசிய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்தி செயல்முறையை கருத்தில் கொண்டு இதை அறிவிக்கிறோம். இவ்வாறு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் கூறியுள்ளார். அமெரிக்காவின் பொது மருந்து சந்தையில் சுமார் 40% பங்களிப்பை இந்தியா சப்ளை செய்து வருகிறது.

கடந்த 2024-25ஆம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த மருந்து ஏற்றுமதியான ரூ.2.50 லட்சம் கோடியில், ரூ.93 ஆயிரம் கோடி மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களுக்கான குறைந்த விலை மருந்துகளை இந்தியா சப்ளை செய்வதால், அமெரிக்காவின் சுகாதாரத் துறைக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சமாகிறது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இறக்குமதி செய்யப்படும் மருந்துப் பொருட்களுக்கு 100% வரி விதிப்பதாக அறிவித்துள்ளது இந்திய மருந்து நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்ட நிலையில், மருந்துத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. தற்போது மருந்துத் துறை மீதும் வரி விதிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

* அமெரிக்காவில் என்னென்ன நடக்கும்?

* 2024ம் ஆண்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு மருந்து மற்றும் மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்தது. இப்போது 100 சதவீத வரி விதித்து இருப்பதால் மருந்துகளுக்கான விலைகள் இரட்டிப்பாகும். சுகாதாரப் பாதுகாப்பு செலவுகள், மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ உதவிக்கான செலவுகள் அமெரிக்காவில் உச்சத்தை எட்டும்.

* அமெரிக்காவில் வீடு வாங்குவது இனி கடினமான பணியாக மாறிவிடும். ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை பட்டியல் அடிப்படையில் அமெரிக்காவில் வீடுகள் விலை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட 11.7 சதவீதம் அதிகரித்துள்ளன.

* கனரக லாரி பாகங்கள் இறக்குமதிக்கு 25 சதவீதம் வரி விதித்து இருப்பதால் அங்குள்ள பீட்டர்பில்ட், கென்வொர்த், பிரைட்லைனர், மேக் டிரக்குகள் மற்றும் பெரிய டிரக் நிறுவன உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* அமெரிக்காவில் சுகாதார நெருக்கடி ஏற்படுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் புதிய வரி விதிப்பால், இந்திய மருந்து நிறுவனங்களின் லாபம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால், இந்திய நிறுவனங்கள் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா போன்ற மாற்றுச் சந்தைகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் அமெரிக்காவிலும் மருந்துப் பொருட்களின் விலை கடுமையாக உயரும். அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, அந்நாட்டு சுகாதாரத் துறை பெரும் நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் கூறப்படுகிறது.

* உள்நாட்டிலே எதிர்ப்பு

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த புதிய அறிவிப்பு அமெரிக்காவில் பணவீக்கம் மற்றும் பொருளாதார ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று வணிக துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இருப்பினும் அதை டிரம்ப் நிராகரித்துள்ளார். அவர் கூறுகையில், ‘அமெரிக்காவில் உற்பத்தி செய்து, அமெரிக்காவில் விற்பனை செய்ய வேண்டி இந்த நடவடிக்கை’ என கூறியுள்ளார்.

Advertisement

Related News