உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து முக்கியமான பேச்சுவார்த்தை!
07:48 AM Aug 10, 2025 IST
6 ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - ரஷிய அதிபர் புதின் இருவரும் சந்திக்க உள்ளனர். உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து முக்கியமான பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. அலாஸ்காவில் வரும் 15ம் தேதி இந்தச் சந்திப்பு நடக்க உள்ளது. இதற்கிடையே, அமைதி திரும்ப சில பகுதிகளை உக்ரைன் திரும்ப வழங்க வேண்டும் என்ற ட்ரம்ப் கோரிக்கையை, உக்ரைன் அதிபர் நிராகரித்துள்ளார்.