முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட்
10:12 AM Jul 09, 2024 IST
Share
சென்னை : சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் முறைகேட்டில் ஈடுபட்டதாக குடியுரிமை அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சென்னை விமான நிலைய குடியுரிமை பிரிவில் இமிகிரேஷன் அலுவலராக பணியாற்றிய சரவணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இமிகிரேஷன் அலுவலர் சரவணன் நடவடிக்கைகளை கண்காணித்ததில் அவர் முறைகேடு செய்துள்ளது உறுதியானது.