இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள் அரசு விழா முதல்வருக்கு தலைவர்கள் நன்றி
Advertisement
தமிழர் விடுதலைக்களம் நிறுவன தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தியாகி இம்மானுவேல் சேகரனாரின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். முதல்வரின் முயற்சிக்கு நாங்கள் எப்போதும் தோள் கொடுப்போம்’’ என்று கூறியுள்ளார். அதேபோல, தேவேந்திரகுல மக்கள் இயக்கத் தலைவர் குமுளி ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பல ஆண்டுகளாக தேவேந்திர குல மக்கள் வைத்த கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார்.
Advertisement