நான் நலமாக இருக்கிறேன்; பிரபல தொகுப்பாளர் அப்துல் ஹமீத் வெளியிட வீடியோ வைரல்!
இதையடுத்து தான் உயிருடன் இருப்பதாகவும் தன்னைக் குறித்து வந்த செய்தி வதந்தி என்றும் அப்துல் ஹமீது வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கனவே மூன்று முறை அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவிய நிலையில் மீண்டும் அவர் நேற்று இறந்து விட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தான் இறக்கவில்லை எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகு பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்து விட்டது என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.