உடல் நலக்குறைவால் பிரபல நடிகர் கோட்டா சீனிவாசன் (83) காலமானார்!!
இவர் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 750க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 2003ம் ஆண்டு வெளியான சாமி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். மேலும் திருப்பாச்சி, கோ, சகுனி, குத்து, ஏய் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். திரைத்துறை சேவையை பாராட்டி 2015ல் கோட்டா சீனிவாசராவுக்கு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது
இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை வாய்ந்தவராக வளம் வந்தார். இவரது நடிப்பில் கடைசியாக 2023ம் ஆண்டு சுவர்ண சுந்தரி என்ற படம் வெளியானது. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (ஜூலை 13) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.