சட்டவிரோதமாக பெங்களூருவில் தங்கி இருந்த இலங்கை அகதிகள் கைது
பெங்களூரு: சட்ட விரோதமாக பெங்களூருவில் தங்கியிருந்த இலங்கை அகதிகளை போலீசார் கைது செய்துள்ளதாக மாநகர கமிஷனர் சீமந்த்குமார் சிங் தெரிவித்தார். பெங்களூரு தேவனஹள்ளி பகுதியிலுள்ள ஒரு குடியிருப்பில் விசா உள்ளிட்ட எந்த ஆவணமின்றி தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து தமிழ்நாடு ராமேஸ்வரத்திற்கு இந்த மூவர் வந்துள்ளனர். கடல் வழியாக ராமேஸ்வரம் வந்து அதன் பிறகு வெளிநாட்டை சேர்ந்த மற்றொருவர் உதவியுடன் பெங்களூருவில் தங்கியிருந்துள்ளனர். அவர்களிடம் விசா உள்ளிட்ட எந்த ஆவணங்களும் இல்லை. அதே நேரம் சில ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறோம். என்றார்.
Advertisement
Advertisement