சட்டவிரோத குவாரி விபத்தில் 6 பேர் இறந்த விவகாரம்: அறிக்கை தர ஐகோர்ட் கிளை ஆணை
மதுரை: சட்டவிரோத குவாரி நடவடிக்கைகளைத் தடுக்க தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மல்லாகோட்டை கிராமத்தில் கல்குவாரி விபத்தில் 6 பேர் இறந்த விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில், கல்குவாரி விபத்தில் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.