இளையராஜா பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்து சோனி நிறுவனம் விவரம் தாக்கல் செய்ய ஐகோர்ட் ஆணை..!!
சென்னை: இளையராஜா பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்து சோனி நிறுவனம் விவரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தனது அனுமதியின்றி பாடல்களை பயன்படுத்தி வருவதாக இளையராஜா புகார் தெரிவித்திருந்தார்.தொடர்ந்து, சோனி மியூசிக் என்டர்டைன்மென்ட், எக்கோ ரெகார்டிங் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இளையராஜா வழக்கு தொடர்ந்தார்.
அப்போது இளையராஜா தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில் எனது இசை படைப்புகள் காப்புரிமை சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது. எனது இசை படைப்புகளுக்கு நானே உரிமையாளர், மற்றவர் உரிமை கோரவோ, பயன்படுத்தவோ அதிகாரம் இல்லை. தனது பாடல்களை சோனி நிறுவனம் தவறாக பயன்படுத்தி வருமானம் ஈட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், இளையராஜாவின் இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருமானம் எவ்வளவு? என கேள்வி எழுப்பியது. மேலும், இளையராஜா பாடல்களை பயன்படுத்தி ஈட்டிய வருமானம் குறித்து சோனி நிறுவனம் விவரம் தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து. வரவு, செலவுகளை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.