SIR-ல் தீர்க்கப்படாத சந்தேகங்கள்.. அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய மூத்த வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ!!
சென்னை : SIR-ல் தீர்க்கப்படாத சந்தேகங்கள் தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோ அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"2002/2005 SIRல் தரவுகள் ஒத்துப்போகாதவர்கள், அவர்களது ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என SIR படிவத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த பணிகள் எப்படி நடத்தப்படும்?
இந்த பணிகளுக்கான அறிப்பாணையை எப்போது வெளியிடப் போகிறீர்கள்?
இதுகுறித்து வாக்காளர்களுக்கு எதன் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்? அஞ்சலா? தொலைபேசியா?அல்லது பொது அறிவிப்பின் மூலமாகவா?
இந்த ஆவணங்களை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்? ஆட்சியர் அலுவலகமா? தாலுகா அலுவலகமா? ஊராட்சி அலுவலகமா? வேறு ஏதேனும் இடத்திலா?
இதையெல்லாம் தேர்தல் ஆணையம் முன்பே தெரிவிக்காமல் தவிர்ப்பது ஏன்?
வழிமுறைகளை முன்கூட்டியே தெரியப் படுத்துவது அவசியம். கடைசி நேரத்தில் மக்களை அலைக்கழிக்கக் கூடாது,"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.