நாட்டின் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் 7வது ஆண்டாக ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதலிடம்
டெல்லி :17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டது ஒன்றிய அரசு. சிறந்த உயர்கல்வி நிறுவன 2 தரவரிசைப் பட்டியலை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. நிலையான வளர்ச்சிக்கான இலக்கை எட்டுவதில் தொடர்ந்து 7வது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. தரவரிசையில் இரண்டாம் இடத்தில் டெல்லி ஐஐடி, 3 ஆம் இடத்தில் மும்பை ஐஐடி உள்ளது. நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் 2வது இடம் பிடித்துள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 10வது இடத்தை பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகள் பட்டியலில் கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி 10வது இடம், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 9வது இடம் வகிக்கின்றன. சிறந்த மருத்துவக் கல்லூரி பட்டியலில் வேலூர் சிஎம்சி கல்லூரி 3வது இடம்பிடித்துள்ளது. மருந்தியல் தரவரிசை பட்டியலில் சென்னை எஸ்.ஆர்.எம். கல்லாரி 10-வது இடம் பிடித்துள்ளது. சிறந்த பொறியியல் கல்லூரிகளுக்கான தரிவரிசை பட்டியலில் ஐஐடி மெட்ராஸ் 10வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது.