தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாஜியை புறக்கணிக்கும் மற்றொரு மாஜி மந்திரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

Advertisement

‘‘இலைக்கட்சியின் மாஜி மணியான அமைச்சர் மீது மற்றொரு மாஜி கடும் அதிருப்தியில் இருக்கிறாராமே தெரியுமா..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.

‘‘சேலத்துக்காரர் ஒவ்வொரு பகுதியிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த வாரம் கடலோர மாவட்டத்திற்கு வருகை தர உள்ளாராம்.. இதற்கான கூட்டத்தை கூட்டுவதற்கான வேலைகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறதாம்.. கடலோர மாவட்ட மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ தனது ஆதரவாளர்களுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறாராம்.. குறிப்பாக, சேலத்துக்காரர் வரும்போது, அதிகளவு கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக நிர்வாகிகளை சந்தித்து வருகிறாராம்.. நிர்வாகிகளை சந்திக்கும் போது ‘மணியானவர்’ மற்றொரு மாஜி அமைச்சரை தன்னுடன் அழைத்து செல்வது கிடையாதாம்.. தன்னை மணியான அமைச்சர் தொடர்ந்து புறக்கணிப்பு செய்வதிலேயே ஆர்வம்காட்டி வரும் தகவல் தெரிய வந்ததும் அந்த மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியுடன் மலராத கட்சி கூட்டணி அறிவிச்சாலும் இன்னும் பல ஊர்ல தாமரை இலை தண்ணீர் போலத்தான் இருக்கிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கூட்டணி என இலைக்கட்சி, மலராத கட்சி தரப்பில் அறிவித்தாலும், புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் இன்னமும் இவர்களிடம் ‘கூட்டணி’ ஏற்படவே இல்லையாம்.. இருவரும் தனித்தனியாக தான் செயல்படுகின்றனராம்.. புரம் என முடியும் ஊரில் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடைகள் கட்டப்பட்டிருக்கு.. இந்த கடைகளுக்கான ஒதுக்கீடு தொடர்பாக இலைக்கட்சி தரப்பில், மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்க முடிவு செய்து, மலராத கட்சியின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருக்காங்க.. ஆனால், மனு கொடுக்க வர முடியாது என மலராத கட்சி தரப்பினர் கூறி விட்டனராம்.. ஏற்கனவே, இங்கு இலைக்கட்சியில் டாக்டர் டீம், மாஜி அமைச்சர் டீம், மா.செ. டீம் என 3 அணிகள் செயல்படுகின்றன.. ஒருவரை ஒருவர் பொதுமேடையிலேயே ஒருமையில் பேசும் அளவுக்கு மல்லுக்கட்டிக்கிட்டு நிற்கிறாங்க.. இதனால் மாவட்டத்தில் யார் பக்கம் நிற்பது என தெரியாமல் அக்கட்சியினரே குழம்பி தவிக்கிறாங்க.. இந்த சூழலில், இலைக்கட்சி-மலராத கட்சி கூட்டணி அறிவிச்சாலும் புரம் மாவட்டத்தில் இரு கட்சியும் தாமரை இலை தண்ணீர் போலத்தான் இருப்பதாக தொண்டர்கள் முணுமுணுக்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மன்மத லீலையில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை இல்லாததை கண்டித்து பெண் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதிக்கப் போறாங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர மாமா.

‘‘வெயிலூர் நகரம் தோட்டமான பகுதியில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளியில் 8 பெண் ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்களாம்.. இந்த பள்ளிக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு தலைமை ஆசிரியராக கவுண்டமான நடிகரிடம் அடிவாங்கும் காமெடியன் பெயரை கொண்டவர் வந்தாராம்.. அவர் வந்ததும், தனக்கு கீழ் வெறும் பெண் ஆசிரியர்கள் பணியாற்றுவதை கண்டு குஷியாகி விட்டாராம்.. அவ்வப்போது அவர்களை தனது மன்மத செயல்களால் சீண்டி பார்த்துள்ளாராம்.. ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பெண் ஆசிரியர்கள் தங்கள் சங்கத்திடம் முறையிட பள்ளிகளை கவனிக்கும் மாவட்ட அதிகாரியிடம் புகார் கொடுத்தார்களாம்.. அதன் அடிப்படையில் அவரும் மூத்த ஆசிரியர்களை கொண்ட போக்ஸ் குழு, உள்ளூர் புகார் குழு என்ற குழுக்களை அமைத்து 2023ம் ஆண்டு விசாரணை நடந்ததாம்.. ஆனால், விசாரணைக்கு குற்றம்சாட்டப்பட்டவர் ஒத்துழைப்பே தரவில்லையாம்.. என்னை யாரும், எதுவும் செய்துவிட முடியாது. நான் யார் தெரியுமா? என்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்களிடமே சவால் விட்டாராம்.. இதனால் வேறுவழியின்றி சமூக நலத்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதாம்.. விசாரணை முடிந்தும் அறிக்கை வெளியாகாமல் இழுத்தடிக்கப்பட்டதாம்.. பின்னர் மாவட்ட அதிகாரி மூலம் விசாரணை

‘‘குழு ரோந்து என்ற பெயரில் இரவு ரோந்துக்கு வந்து நொந்து நூல்டுஸ் ஆகிறாங்களாமே புதுச்சேரி காவலர்கள்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இரவு ரோந்து என்ற பெயரில் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதாக புதுச்சேரி போலீசார் குமுறி வருகின்றனராம்.. சுந்தரமான டிஐஜி, குற்றச்செயல்களை குறைக்கும் வகையில், காவல்துறை அதிகாரிகள் தலைமையில் குழு அமைத்து இரவு ரோந்து வர வேண்டும் என உத்தரவிட்டுள்ளாராம்.. ஆனால் இதில் பகல் நேரங்களின் ஸ்டேஷன் டுயூட்டியில் பணியில் இருக்கும், காவலர்களை குழுவில் சேர்த்துவிட்டார்களாம்.. இரவு 3 மணிவரை ரோந்து பணியில் இருக்கும் காவலர்களை மீண்டும் காலை 7 மணிக்கு ஸ்டேஷன் ரோல்காலில் வரச்சொல்லி நிர்ப்பந்தம் செய்யுறாங்களாம்.. அப்படி வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவாம்.. இதனால் நொந்து நூடுல்ஸ் ஆன காவலர்கள், நாங்களும் மனிதர்கள்தான், இயந்திரமா, இரவு டியூட்டி முடிந்து 3 மணி நேரத்தில் மீண்டும் பணி என்றால் உடலும், உள்ளமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறதே.. இதனை ஸ்டேஷன் அதிகாரிகளிடம் கூறினால், டிஐஜிக்கிட்ட போய் சொல்லுபா என்கிறார்களாம். சிறப்புக்குழு அமைத்தால், ஸ்டேஷன் டியூட்டி பார்ப்பவர்களை தவிர்த்து, அதில் ஆயுதப்படை, இன்னும் பிற பிரிவு காவலர்களை பயன்படுத்தலாம், இல்லாவிட்டால் இரவு ரோந்து வருபவர்களுக்கு 8 மணி நேர ஓய்வுக்கு பிறகு பணி வழங்க வேண்டும். இதையெல்லாம் யார்தான் சாருக்கு சொல்வதுன்னு புலம்புகின்றனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

‘‘பட்டா வாங்கி தருகிறேன் என்று பல பேருக்கு லட்சக்கணக்கில் பட்டை போட்டு விட்டார்களாமே..’’ என ஆச்சர்யத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கிருஷ்ணகிரியில் மாவட்ட கலெக்டருக்கு கீழ் வருவாய்துறை உயர் அதிகாரி சக்சஸ் வாய்சுக்கு சொந்தக்காரரான அதிகாரி பணியாற்றி வருகிறாராம். அவர் சொந்த மாவட்டத்திலேயே பணியாற்றி வருகிறாராம். அவரது சகோதரரும் அதே ஊரில்தான் உள்ளாராம். இவர், தனது தம்பியிடம் சொல்லி, பட்டா வாங்கித் தருகிறேன் என்று பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளாராம். சொன்னபடி பட்டா வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் தம்பி செல்வாக்கில் தப்பித்து வருகிறாராம். அண்ணன் செய்யும் செயலால் தம்பி சிக்குவது உறுதி என்கின்றனர் வருவாய்துறை அதிகாரிகள்..’’ என்றார் விக்கியானந்தா.

Advertisement

Related News