வாடிக்கையாளர்கள் அதிருப்தியால் பின்வாங்கியது ICICI
டெல்லி; ஐசிஐசிஐ வங்கி சேமிப்பு கணக்குக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகை ரூ.15,000ஆக குறைக்கப்பட்டுள்ளது. பெருநகரம், நகர்ப்புறங்களில் இருப்புத் தொகை ரூ.50,000 இருக்க வேண்டும் என ஐசிஐசிஐ அறிவித்திருந்தது. இருப்புத் தொகையை ரூ.50,000ஆக ஐசிஐசிஐ உயர்த்தியதால் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கடும் எதிர்ப்பை அடுத்து குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ.15,000ஆக குறைத்து ஐசிஐசிஐ அறிவித்தது. புறநகர்ப் பகுதி வாடிக்கையாளர்களுக்கான இருப்புத் தொகை ரூ.25,000லிருந்து ரூ.7,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான இருப்புத் தொகை ரூ.10,000லிருந்து ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டுள்ளது.