நாட்டிலேயே அதிகம் ஐசிஐசிஐ வங்கியில் மினிமம் பேலன்ஸ் தொகை ரூ.50,000
மும்பை: ஐசிஐசிஐ வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெருநகரங்களில் மற்றும் நகர்ப்புறங்களில் ஆகஸ்ட் 1ம் தேதி மற்றும் அதன் பின்னர் சேமிப்பு கணக்கு தொடங்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் மாதாந்திர சராசரி குறைந்தபட்சம் இருப்பாக 50,000 ரூபாயை வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்.அதேபோல சிறு நகரங்களில் மினிமம் பேலன்ஸ் 5,000 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய் ஆகவும், கிராமப் பகுதிகளில் 10,000 ரூபாய் ஆகும்.
குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அந்த பற்றாக்குறையில் 6 % அல்லது 500 ரூபாய் என எது குறைவாக இருக்கிறதோ அந்த தொகை அபராதமாக விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினால், நாட்டில் உள்ள வங்கிகளில் மிக உயர்ந்த மினிமம் பேலன்ஸ் கொண்ட வங்கியாக ஐசிஐசிஐ மாறியுள்ளது.