பிட்ஸ்... பிட்ஸ்... பிட்ஸ்...
ஐசிசி ஆண்டு பொதுக்குழு கூட்டம்
சிங்கப்பூரில் ஐசிசி ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று முதல் 4 நாட்கள் நடக்கிறது. இதில், 5வது டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் இரு பிரிவுகளாக அணிகளை பிரிப்பது, அமெரிக்காவில் 2028ல் நடைபெறும் ஒலிம்பிக்கில் டி.20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான தகுதி சுற்று செயல்முறை குறித்து விவாதிக்கப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் செப்டம்பரில் நடைபெற உள்ள ஆசியக் கோப்பை தொடர் குறித்து பிசிசிஐ மற்றும் பிசிபி ஆகியவையும் உரையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
பும்ராவை காயப்படுத்த இங்கிலாந்து முயற்சி?
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா லார்ட்ஸ் டெஸ்டில் பேட்டிங் செய்தபோது, தலை, கை மற்றும் தோள்பட்டையில் வேண்டுமென்றே பவுன்சர்களை வீசி இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் அவரை காயப்படுத்த முயன்றதாக முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் குற்றம்சாட்டி உள்ளார். அவரின் பந்து வீச்சை எதிர்கொள்ள கடும் சவாலாக இருப்பதால், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ராவை காயப்படுத்த முயன்றதாக கைப் கூறி உள்ளார்.
வயதான டெஸ்ட் நம்பர் 1 பேட்டர்
இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜோ ரூட் லார்ட்ஸ் டெஸ்ட்டில் 37வது சதத்தை அடித்த நிலையில், சக வீரர் ஹாரி புரூக்கை பின்னுக்கு தள்ளி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் 1 இடத்தை மீண்டும் பிடித்துள்ளார். 2014ம் ஆண்டுக்கு இலங்கையின் குமார் சங்கக்கராவுக்குப் பிறகு இந்த இடத்தைப் பிடித்த மிக வயதான வீரர் இவர்தான். இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் 3 இடங்கள் சரிந்து 9வது இடத்தைப் பிடித்துள்ளார், யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4வது இடம்) மற்றும் ரிஷப் பன்ட் (7வதுஇடம்) ஆகியோரும் தலா ஒரு இடம் சரிந்துள்ளனர்.