ஆசியக்கோப்பைக்கான போட்டி நடுவரை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி
துபாய் : ஆசியக்கோப்பைக்கான போட்டி நடுவரை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கோரிக்கையை நிராகரித்தது ஐசிசி. இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது நடுவராக செயல்பட்டார் ஆண்டி பைகிராஃப்ட். டாஸின் போது இந்திய கேப்டனுடன் கைகுலுக்க வேண்டாம் என ஆண்டி பைகிராஃப்ட் கூறியதாக பாகிஸ்தான் கேப்டன் புகார் அளித்தார். போட்டி நடுவர் ஒருதலைபட்சமாக செயல்பட்டதால் அவரை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது பாகிஸ்தான்.
Advertisement
Advertisement