முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் ஈடி சோதனை
கவுஹாத்தி: அசாம் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் ரூ.105கோடி ஊழல் நடந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த கவுன்சிலின் முன்னாள் நிர்வாக தலைவரும் இயக்குனருமான சீவாலி தேவி சர்மா மீது பணமோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக அசாமில் சர்மாவுக்கு சொந்தமான 8 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.