வரி விதிப்பை கருவியாக பயன்படுத்தி சில போர்களை நான் நிறுத்தியுள்ளேன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: வரி விதிப்பை கருவியாக பயன்படுத்தி சில போர்களை நான் நிறுத்தியுள்ளேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அக்.,10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 20 அம்ச அமைதி திட்டத்தை முன்மொழிந்தார். அதன்படி, முதற்கட்டமாக பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முக்கிய கூட்டம் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் இன்று நடக்கிறது. எகிப்து அதிபர் அப்தெல் பத்தா அல் - சிசி உட்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்தக் கூட்டத்தில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது. இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு எகிப்து செல்வதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டு சென்றார்.பின்னர் பேசிய அவர், வரி விதிப்பு மூலம் இந்தியா - பாகிஸ்தான் போரை தான் நிறுத்தியுள்ளதாக டிரம்ப் மீண்டும் பேசினார்.
இன்று காஸா அமைதி உச்சி மாநாடு - மோடிக்கு அழைப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில் எகிப்தில் இன்று காஸா அமைதி உச்சி மாநாடு நடைபெறுகிறது.எகிப்தில் இன்று காஸா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் வெளியுறவு இணை அமைச்சர் கே.வி.சிங் காஸா அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். எகிப்தில் இன்று நடைபெறும் உச்சிமாநாட்டில் இஸ்ரேல் காஸா இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
காஸா அமைதி உச்சி மாநாடு - ஹமாஸ் புறக்கணிப்பு?
டிரம்ப் தலைமையில் நடைபெறும் காஸா அமைதி உச்சி மாநாட்டை ஹமாஸ் புறக்கணிக்கப் போவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் காஸாவின் நலனுக்கு எதிராக உள்ளதாக ஹமாஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.