ஹூண்டாய் வெனு
ஹூண்டாய் நிறுவனம், புதிய தலைமுறைக்கான ஹூண்டாய் வெனு காரை அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 1.2 லிட்டர் என்ஏ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 83 எச்பி பவரையும், 114 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் உள்ளது. இதுபோல் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்டும் உள்ளது. இதில் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் வேரியண்டில் கிடைக்கும். இவை தவிர, 1.5 லிட்டர் டீசல் வேரியண்டும் உள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 116 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
தோற்றத்தில் பொலிவுபடுத்தப்பட்டுள்ள இந்தக் காரில் அகலமான கருப்பு குரோம் கிரில்கள், ஸ்பிளிட் ஹெட்லாம்ப், சி வடிவ எல்இடி டிஆர்எல்கள், பின்புறம் எல்இடி லைட் பார், 12.3 அங்குல டிஸ்பிளே, லெவல் 2 அடாஸ் பாதுகாப்பு உட்பட பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எச்எக்ஸ்2, எச்எக்ஸ்4, எச்எக்ஸ் 6, எச்எக்ஸ் 7, எச்எக்ஸ்8 மற்றும் எச்எக்ஸ் 10 ஆகிய வேரியண்ட்கள் உள்ளன. டீசல் இன்ஜின் வேரியண்டில் எச்எக்ஸ் 2, எச்எக்ஸ் 10 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க வேரியண்டான எச்எக்ஸ் 2 மேனுவல் கியர் பாக்ஸ் விலை சுமார் ரூ.7,89,900 டாப் வேரியண்டான எச்எக்ஸ் 10 சுமார் ரூ.15,51.100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.