ஹூண்டாய் நைட் எடிஷன் கார்கள்
ஹூண்டாய் நிறுவனம் அல்காசர் மற்றும் ஐ20 நைட் எடிஷன் கார்கள் அறிமுகம் செய்துள்ளது. அல்காசர் நைட் எடிஷனில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 160 எச்பி பவரையும், 253 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டிசிடி கியர் பாக்ஸ் உள்ளது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் வேரியண்டிலும் கிடைக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 116 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு டார்க்யூ கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் உள்ளது. இது, பெட்ரோல் டிசிடி சிக்னேச்சர் நைட் மற்றும் டீசல் ஏடி சிக்னேச்சர் நைட் என 2 வேரியண்ட்களில் கிடைக்கும். துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.21.66 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐ20 நைட் எடிஷனில் , ஐ20 என் லைனில் உள்ள 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 120 எச்பி பவரை வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் மற்றும் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் என 2 வகையாக கிடைக்கும். ஸ்போர்ஸ் (ஓ) எம்டி நைட், அஸ்டா எம்டி, அஸ்டா (ஓ) எம்டி அஸ்டா (ஓ) சிவிடி மற்றும் அஸ்டா (ஓ) சிவிடி நைட் எடிஷன்களில் . துவக்க ேஷாரூம் விலை சுமார் ரூ.9.15 லட்சம் எனவும், டாப் வேரிண்ட் சுமார் ரூ.11.35 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நைட் எடிஷன் என்ற பெயருக்கு ஏற்ப இந்த கார்களில் இன்டிரீயர் மற்றும் வெளிப்புறம் முழுக்க முழுக்க கருப்பு நிற தீமில் உருவாக்கப்பட்டுள்ளது.