ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: தமிழ்நாட்டில் எந்த பகுதிகளிலும் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு அரசு அனுமதி வழங்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 'விவசாயிகளை பாதிக்கும் எந்த ஒரு திட்டத்தையும் அரசு அனுமதிக்காது என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் திடமான கொள்கை. தற்போது மட்டுமின்றி எதிர்காலத்திலும் தமிழ்நாட்டில் எந்தவொரு பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்காது. ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை உடனே திரும்ப பெற உத்தவு' எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement