பி.இ. பட்டதாரி மனைவியை ஏமாற்றிய காதல் கணவர் காதலி வீட்டில் கையும் களவுமாக பிடித்த மனைவி
இந்த தம்பதிக்கு 9 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது கணவன் மனைவி இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில் இருவருக்கும் கருத்துவேறுபடுகாரணமாக பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதில் வரதட்சணையாக பணம் நகை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தியதாக கலைச்செல்வி பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் அளித்துஉள்ளார் தம்பதி இடையிலான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் முதல் மனைவி ஜீவனாம்சம் கேட்டு சென்னை உயிர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடர்ந்து உள்ளர் இந்நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வேறுஒரு பெண்ணுடன் லோகநாதன் புதுப்பேட்டையில் தனிகுடித்தினம் நடத்திவந்து உள்ளர் .
இது பற்றி அறிந்த மனைவி கலைச்செல்வி புதுப்பேட்டையில் உள்ள வீட்டுக்கு நேரில் சென்று கையும்களவுமாக பிடித்து கூச்சல்லிட்டு வீட்டுக்கு பூட்டுபோட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது பற்றி அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கலைச்செல்வியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் . பின்னர் பூட்டை திறந்து லோகநாதனை வெளிய வரவைத்தனர் . அப்போது லோகநாதனுடன் விட்டுக்குள் இருந்த பெண்ணுக்கும் மனைவி கலைச்செல்விக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
தங்கள் லிவிங் டுகெதராக வாழ்வதாக அந்த பெண் கூறியதால் தகராறு மேலும் முற்றியதை தொடர்ந்து இருவரையும் போலீசார் சமாதானம் செய்துவைத்தனர் பின்னர் போலீசார் லோகநாதனை புதுப்பேட்டை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர் .
வழக்கு நீதிமன்றதில் நிலவையில் உள்ளதால் போலீசார் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். காதலி வீட்டில் இருந்த கணவனை மனைவி கையும்களவுமாக பிடித்து வீட்டை பூட்டிவிட்டு சண்டையிட்ட சம்பவத்தால் பண்ருட்டியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.