ஜமைக்காவை சூறையாடிய மெலிசா சூறாவளி: மணிக்கு 405 கி.மீ. வேகத்தில் சுழன்றடித்த காற்று
ஜமைக்கா: கரீபியன் தீவுகளை தாக்கிய மெலிசா புயல் காரணமாக இதுவரை இல்லாத அளவில் மணிக்கு 405 கி.மீ. காற்று வீசியது. கடந்த அக்டோபர் மாதம் உருவான மெலிசா புயலால் சூறாவளி வீசி மத்திய அமெரிக்க பகுதி மற்றும் கரீபியன் தீவுகளை புரட்டி போட்டது. ஜமைக்காவை சூறையாடிய மெலிசா புயல் தொடர்ந்து கியூபா, பஹாமஸ் ஆகிய நாடுகளையும் பதம் பார்த்தது. இந்த புயலால் 7 லட்சத்திற்கு மேற்பட்டோர் வீடுகள், உடைமைகள், வாகனங்கள், கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஜமைக்காவில் ஐந்தாம் நிலை தீவிர தன்மையுடன் புயல் வீசிய நிலையில் இதுவரை வலிமையான புயல் உருவானது இல்லை என வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த நிலையில், மெலிசா புயல் ஜமைக்காவை நிருங்கிய போது விமானத்தில் இருந்து ஏவப்பட்ட கருவி மூலம் புயலின் வேகம் அளவிடப்பட்டது. அதில் மணிக்கு 405 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி உலகளவில் இதுவரை இல்லாத வகையில் சூறாவளி வீசியதாக பதிவாகியுள்ளது. கடந்த 2010 ஆண்டு தாக்கிய மேகி புயலின் போது மேற்கு பசுமை பகுதியில் மணிக்கு சுமார் 400 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் வீசியதாக கூறப்படுகிறது.