174 ஆண்டுகளில் இதுவே முதல்முறை.. அதி சக்திவாய்ந்த மெலிசா சூறாவளியால் கரீபியத் தீவுகளில் மக்கள் அச்சம்!
ஜமைக்கா: இந்த ஆண்டு மிகவும் சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் மெலிசா ஜமைக்காவை கடக்க தொடங்கிய அதே நேரம், ஹைதியில் கடும் மழை பொழிவால் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. 282 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று, 100 செ.மீ. வரை மழை பொழிவு, 13 அடி எழும் கடல் அலைகள். அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையத்தால் அதிகபட்சமாக வழங்கப்படும் 5ம் நிலை குறியீடு கரீபியத் தீவான ஜமைக்காவில் மெலிசா சூறாவளி ஏற்படுத்த கூடிய தீவிர தன்மையை தான் இவை அனைத்தும் குறிக்கின்றன.
இந்த ஆண்டின் அதி சக்திவாய்ந்த சூறாவளியாக கருதப்படும் மெலிசா போன்று கரீபியன் தீவு பகுதி மக்கள் இதற்கு முன் கண்டதே இல்லை. பேரழிவை ஏற்படுத்த கூடிய சூறாவளியாக அமெரிக்காவின் தேசிய சூறாவளி மையத்தால் வழங்கப்பட்டுள்ள மெலிசாவின் தன்மை குறித்து ஆராய அமெரிக்க விமான படையின் வானிலை குறித்து ஆராயும் விமானம், சூறாவளியின் கண் எனப்படும் மையப்பகுதிக்குள் சென்று காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
மெலிசா சூறாவளி ஜமைக்காவில் பெரும் பாதிப்பையே ஏற்படுத்த கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் தாக்கம் ஹைவி தீவிலும் எதிரொலித்துள்ளது. கனமழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனிடையே ஜமைக்காவின் ஹில்ஸ்டன் நகரில் காற்றின் வேகத்தை உணர்த்த கூடிய சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது. ஜமைக்கா, ஹைதீயில் தலா மூவர் உள்பட இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். ஜமைக்காவை தொடர்ந்து மெலிசா கிழக்கு கியூபா, பஹாமஸ், கைகோஸ் தீவுகள் வழியாக பயணிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.