8070 ச.அடி கொண்ட அனைத்து வீடுகள் மின் இணைப்பு பெற கட்டிட நிறைவு சான்று பெறுவதில் இருந்து விலக்கு: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
அதிலும், 3 வீடுகளை கொண்ட 12 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடங்கள், 8,070 சதுர அடிக்கு மூன்று வீடுகள் வரையிலான ஒரே குடியிருப்புக்கு கடந்த ஆண்டே விலக்களிக்கப்பட்டது. கட்டிட நிறைவு சான்று பெற வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து, எட்டு வீடுகள் வரை விலக்கு அளிப்பதற்கு, விரைவில் அரசாணை வெளியாக இருந்தது. இந்நிலையில் நேற்று ஒரே கட்டிடத்தில் 8 வீடுகளைக் கொண்ட 14 மீட்டர் உயரம் கொண்ட கட்டிடங்கள், 8070 சதுர அடி கொண்ட அனைத்து வீடுகள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள் மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்று பெற வேண்டும் என்ற விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையானது அரசாணை வெளியிட்டுள்ளது.