ஓசூர் அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு!
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சானமாவு வனப்பகுதி அருகே நடந்த இந்த விபத்தில் 2 கார், 2 லாரி, 1 மினி லாரி என 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஓசூரிலிருந்து கிருஷ்ணகிரி நோக்கி இன்று அதிகாலை 4 மணியளவில் கார் ஒன்று பேரண்டபள்ளி வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து முன் சென்ற மினி லாரி மீது மோதியது. காருக்கு பின் தொடர்ந்து வந்த லாரியும் இந்த வாகனங்கள் மீது மோதியது. அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் ஒருவர் சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த முகிலன்(30) எனபது தெரியவந்தது. மற்ற மூவர் விவரம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவு நேரம் மற்றும் அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.