தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் ரூ.1100 கோடி முதலீட்டில் அலகிற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புதிதாக நிறுவவுள்ள Multilayer & HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் அமைக்கவுள்ள Multilayer & HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

Advertisement

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்துவதற்கும் தேவையான முதலீடுகளை ஈர்ப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்பு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அனைவரையும் உள்ளடக்கிய பரவலான வளர்ச்சி என்ற தமிழ்நாடு அரசின் கொள்கைக்கேற்ப ஈர்க்கப்படும் தொழில் திட்டங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக அமைக்கப்பட்டு, இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட்

ஆம்பர் குழுமத்தின் துணை நிறுவனமான அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட், ஓசூர் எல்காட் தொழில் நுட்பப் பூங்காவில், ஒரு புதிய Multilayer & HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டம் மேற்கொள்ள உள்ளது. தொலைத் தொடர்பு, மோட்டார் வாகன உற்பத்தி, வான்வெளி மற்றும் நுகர்வோர் மின்னணு துறைகளில் உள்ள அடுத்த தலைமுறை பயன்பாடுகளுக்காக இந்த உற்பத்தி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், இந்தியாவின் மிகப் பெரிய மின்சுற்றுப் பலகை உற்பத்தி நிலையங்களில் ஒன்றாக உருவாக உள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் போது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், இந்த உற்பத்தித் திட்டத்திற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள எல்காட் ஓசூர் தொழில் நுட்பப் பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1100 கோடி ரூபாய் முதலீட்டில் 1200 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் அமைக்கவுள்ள Multilayer & HDI Printed Circuit Boards உற்பத்தி திட்டத்திற்கு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கே.கோபிநாத், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.மதியழகன், ஒய்.பிரகாஷ், டி. ராமச்சந்திரன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் வி.அருண் ராய். இ.ஆ.ப., வழிகாட்டி நிறுனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., சிப்காட் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், இ.ஆ.ப., எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் கே.பி.கார்த்திகேயன், இ.ஆ.ப., கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் சி.தினேஷ் குமார், இ.ஆ.ப., அசென்ட் சர்க்யூட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.மஞ்சுநாத், தலைமைச் செயல் அலுவலர் சந்தோஷ் குண்டாபி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Related News