ஓசூரில் ஒன்றாக சுற்றித்திரியும் 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம்: வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை
கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே சானமாவு பகுதியில் 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக சுற்றுத்திரிவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே சானமாவு பகுதியில் 40க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் இன்று காலை இடம்பெயர்ந்தது. இதன் காரணமாக வனப்பகுதி ஒட்டியுள்ள கிராம பகுதி மக்களுக்கு வனத்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதாவது ராயக்கோட்டை வனப்பகுதிலிருந்து 40க்கும் மேற்பட்ட யானை கூட்டங்கள் இன்று காலை ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதிக்கு இடம்பெயர்ந்துள்ளது. யானை கூட்டங்கள் வனப்பகுதி அருகேயுள்ள விளைநிலங்களில் நெல் மற்றும் ராகி பயிர்கள் அறுவடைக்கு தயாராகவுள்ளது.
அதனை சாப்பிடுவதற்காகவும், நீர்நிலையை தேடியும் வெளியே வர யானைங்கள் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு அச்சுறுத்துலும் ஏற்படும் என்பது காரணத்தினால் இரவு நிறங்களில் விவசாயிகள் தோட்டத்துக்கு காவலுக்கு செல்ல வேண்டாம் எனவும் யானைகள் கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கமாறும் வந்துறையினருக்கு கிராம பகுதிக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதில் விவசாயிகள் தொடர்ந்து யானைகள் வந்து கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.