ஓசூரில் திருமணம் ஆகாதவர்கள் பூங்காவிற்குள் செல்ல அனுமதி இல்லை: 2K கிட்ஸ்களின் எல்லை மீறும் செயல்களால் எச்சரிக்கை
ஓசூர்: காதல் என்ற பெயரில் பொது இடங்களில் அத்துமீறி அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை தடுக்க ஓசூரில் பூங்கா நிர்வாகம் புதுவிதமான பேனரை வைத்து எச்சரித்துள்ளது. புனிதமாக பார்க்கப்பட்ட காதல் இன்று பொது இடங்களில் எல்லை மீறும் 2கே கிட்ஸ்களால் காதல் என்றாலே முகம் சுழிக்க நேரிடுகிறது. குறிப்பாக பூங்காக்களில் உடற்பயிற்சி, நடைப்பயிற்சிகாக வரும் மூத்த குடிமக்கள் காதல் ஜோடிகளை கண்டாலே கடிந்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனை தடுக்கும் வகையில் ஓசூர் ராமநாயக்கன் ஏரி பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் எச்சரிக்கை பேனர் வைக்கப்பட்டுள்ளது. கல்யாணம் ஆகாவிட்டால் அனுமதி இல்லை என்ற இந்த பேனருக்கு பரவலாக எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால் பூங்காவிற்கு தினமும் வருபவர்களோ இதை ஆதரிக்கின்றனர். எதிர்ப்புகளால் பேனரை அகற்றிய பூங்கா நிர்வாகம் இளம் தலைமுறையினர் எல்லை மீறும் தவறுகளை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.