யானைகளால் மருத்துவமனை கட்டடம் சேதம்
04:45 PM Aug 13, 2025 IST
கோவை: வால்பாறை அருகே அரசு மருத்துவமனையை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் நோயாளிகள் அச்சம் அடைந்துள்ளனர். வாகமலை தேயிலை தோட்டப் பகுதியில் 12 காட்டு யானைகள் நள்ளிரவில் கட்டடத்தை சேதப்படுத்தின. மருத்துவமனை கட்டடத்தை யானைகள் சேதப்படுத்தியதால் சிகிச்சைபெற முடியாமல் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். வனப்பகுதியிலிருந்து வெளியேறிய யானை கூட்டம் வாகமலை பகுதியில் மருத்துவமனை கட்டடத்தை சேதப்படுத்தின.