தமிழ்நாட்டை உலுக்கிய ஆணவக் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகையை தயார் செய்தது சிபிசிஐடி
நெல்லை: நெல்லையில் கடந்த ஜூலையில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தயார் செய்தது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், கடந்த ஜூலை மாதம் காதல் விவகாரம் தொடர்பாக நெல்லையில் ஆணவ படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், கவினின் காதலியின் தந்தை எஸ்.ஐ. சரவணன், சகோதரர் சுர்ஜித் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கொலை வழக்கில் கைதான 3 பேரும் பாளையங்கோட்டை சிறையில் உள்ள நிலையில் குற்றப்பத்திரிகை தயார் செய்துள்ளனர். குற்றப்பத்திரிகை தயாரான நிலையில் ஓரிரு நாட்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. துல்லியமான ஆதாரங்களுடன் சிபிசிஐடி விசாரணை செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் குற்றப் பத்திரிக்கை மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.