ஆணவக் கொலையை தடுக்க சட்டம்: முதலமைச்சரிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்
சென்னை: சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன், முத்தரசன், பெ.சண்முகம் சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்; ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற முதலமைச்சரிடம் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளோம் என்றும், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் அமலில் உள்ளது என்றும் பெ.சண்முகம் தெரிவித்தார். சாதிய ஆணவக் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்றும், சாதிய ஆணவக் கொலைகள் அதிகரிப்பது முற்போக்கான மாநிலத்துக்கு அழகல்ல என்றும் முத்தரசன் தெரிவித்தார். நெல்லையில் கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சரை சந்தித்து கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.