ஹாங்காங் சிக்சஸ் குவைத்தை வீழ்த்தி பாக். சாம்பியன்
மாங் காக்: ஹாங்காங் சிக்சஸ் இறுதிப் போட்டியில் நேற்று, குவைத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஹாங்காங்கின் மாங் காக் நகரில், 6 ஓவர்கள், 6 வீரர்கள் கொண்ட ஹாங்காங் சிக்சஸ் போட்டிகள் நடந்து வந்தன. இதன் இறுதிப் போட்டியில் நேற்று குவைத்-பாகிஸ்தான் அணிகள் மோதின.
Advertisement
முதலில் ஆடிய பாக். 6 ஓவரில், 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன் குவித்தது. அந்த அணியின் கேப்டன் அப்பாஸ் அப்ரிடி 11 பந்தில் 52, அப்துல் சமத் 13 பந்தில் 42 ரன் விளாசினர். பின்னர் களமிறங்கிய குவைத், 5.1 ஓவரில் 92 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அதனால், பாக். 43 ரன் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
Advertisement