ஹோண்டா எஸ்பி 125 அனிவர்சரி எடிஷன்
ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம், 25ம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஹோண்டா எஸ்பி 125 அனிவர்சரி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில் 123.94 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 10.72 பிஎச்பி பவரையும், 10.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.
Advertisement
எல்இடி ஹெட்லாம்ப், 4.2 அங்குல டிஜிட்டல் டிஸ்பிளே, யுஎஸ்பி டைப் -சி சார்ஜிங் போர்ட், சிபிஎஸ், சைடு ஸ்டாண்ட் இன்ஜின் கட்-ஆஃப் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்பெஷல் எடிஷன் என்பதற்கேற்ப பெட்ரோல் டேங்க்கில் பேட்ச் பொருத்தப்பட்டுள்ளது. பிரத்யேக பிராபிக்ஸ், பைரைட் பிரவுன் மெட்டாலிக் பூச்சு கொண்ட அலாய் வீல்கள் ஆகியவை பைக்கிற்கு கூடுதலாக அழகூட்டுகின்றன. ஷோரூம் விலை சுமார் ரூ.1.03 லட்சம்.
Advertisement