ஹோண்டா சிபி 125 ஹார்னெட்
ஹோண்டா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட சிபி 125 ஹார்னெட் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் ஷைன் 125 மற்றும் எஸ்பி 125லங் உள்ள அதே 123.94 சிசி இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 11.1 எச்பி பவரையும், 11.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். முந்தைய மாடலை விட இத 0.3 எச்பி பவர் மற்றும் 0.2 என்எம் டார்க் கூடுதலாகும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. முன்புறத்தில் தங்க நிற பூச்சு கொண்ட டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக்குகள் இடம் பெற்றுள்ளன.
ஹெட்லைட் உள்பட முழுமையான எல்இடி லைட்டிங் இடம் பெற்றுள்ளது. புளூடூத் இணைப்பு வசதி கொண்ட 4.2 அங்குல டிஎப்டி டிஸ்பிளே உள்ளது. இதனை ஹோண்டா ரோட் சிங்க்ரோனைஸ் ஆப் மூலம் இணைத்து மியூசிக் கேட்பது, அழைப்பு, மேசேஜ்களை தெரிந்து கொள்ளும் வசதி, நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. விலை விவரம் ஆகஸ்ட் 1ம் தேதி அறிவிக்கப்படும் என நிறுவனத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.