சொந்த மண்ணில் பிரியாவிடை போட்டி ஆட சாகிப் அல் ஹசன் விருப்பம்
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாகிப் அல்ஹசன். 38 வயது ஆல்ரவுண்டரான இவர் வங்கதேச அணிக்காக 71 டெஸ்ட், 247 ஒருநாள் மற்றும் 129 டி.20போட்டிகளில் ஆடி உள்ளார். கடந்த ஒரு ஆண்டாக அவர் வங்கதேசம் அணிக்காக ஆடாமல் உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு கான்பூரில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்டில் ஆடினார். இந்நிலையில் கொலை வழக்கு ஒன்றில் அவர் மீது எப்ஐஆர்பதிவு செய்யப்பட்டதால் சொந்த நாட்டிற்கு திரும்பவில்லை.
ஏற்கனவே டெஸ்ட், டி.20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அவர் தற்போது, தான் அதிகாரப்பூர்வமாக அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வுபெறவில்லை. வங்கதேசத்திற்கு திரும்பி, ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு முழுத் தொடரை விளையாடி ஓய்வு பெறுவதே எனது திட்டம். அந்த வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.