தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்

திருத்தணி: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு இன்று முதல் 19ம் தேதி வரை 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ஆந்திரா மதுக் கடைகளும் மூடப்பட உள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் முன்னதாகவே 3 நாட்கள் தேவைக்கு ஏற்ப பதுபானம் வாங்கி வைத்துக்கொள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று குவிந்தனர்.
Advertisement

திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டதும் மதுப் பிரியர்கள் ஆர்வத்துடன் கடைகளுக்கு படையெடுத்து மதுபானம் வாங்கிச் சென்றனர். இதனால் டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. மாலை 6 முதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் கடைகளில் மதுப்பிரியர்கள் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர்.

ஒருவருக்கு அதிக பட்சமாக 4 குவாட்டர் அல்லது 2 பீர் மட்டுமே வழங்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் மதுப்பிரியர்கள் ஒன்றுக்கு இரண்டு முறை காத்திருந்து மது வாங்கிச் சென்றனர். 3 நாட்கள் தொடர் விடுமுறையின் போது மதுபானத்தை பதுக்கி கள்ள சந்தையில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் டாஸ்மாக் கடைகள் முன்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். கள்ள சந்தையில் மது விற்பனை நடைபெறுவது உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

* 230 மதுபாட்டில் பறிமுதல்

சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் நேற்று திடீர் சோதனை செய்தனர். அப்போது, வீட்டில் 230 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த பிரதாப் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், வீட்டில் இருந்த 230 மது பாட்டில்கள், ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், வழக்குப்பதிந்து பிரதாப்பை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement

Related News