விடுமுறை தினமான நேற்று கூட்டம் அலைமோதல் திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்: 3 கி.மீ. தூரம் நீண்ட பக்தர்கள் வரிசை
Advertisement
இதனால் 3 கிலோ மீட்டர் தூரம் ஆக்டோபஸ் கமாண்டோ அலுவலகம் வரை அமைக்கப்பட்டுள்ள வரிசையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் 5 மணி நேரமும், திருப்பதியில் வழங்கப்படும் இலவச சர்வ தரிசன டோக்கன் பெற்ற பக்தர்கள் 7 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் அலிபிரி மலைப்பாதையிலும் வேண்டுதலின்படி பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. அலிபிரி சோதனை சாவடியில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து காத்திருப்பதால், நீண்ட நேர சோதனைக்கு பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறது.
Advertisement