ஒகேனக்கல் காவிரியில் வினாடிக்கு 98,000 கன அடி நீர்வரத்து: 5-வது முறையாக அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 5வது முறையாக முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை தீவிரம் அடைந்துள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறப்பு ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாட்டில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 98,000 கன அடியாக நிலவுகிறது. இதனால் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்வதால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது. இதனிடையே நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை ஏத்தியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 29 தேதி நடப்பாண்டில் முதன் முறையாகவும், அணையின் வரலாற்றில் 44வது முறையாகவும் முழுவதுமாக நிரம்பியது. நடப்பாண்டில் ஜூலை 5ஆம் தேதி இரண்டாவது முறையும், ஜூலை 20ல் மூன்றாவது முறையாகவும், அணை முழு கொள்ளளவை எட்டியது. ஜூலை 25ஆம் தேதி தொடர்ந்து இன்று அதிகாலை அணை முழு கொள்ளளவை எட்டியது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1,14,000 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 90,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு குறைக்கப்படுவதால் நிர்வரது படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.