18 ஆண்டாக தலைமறைவாக இருந்த ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதி கைது
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘மொராதாபாத் அடுத்த கட்கர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொலை முயற்சி வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக, பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட்டில் உள்ள ஃபசலாபாத்தில் வசிக்கும் உல்பத் உசேனை போலீசார் தேடி வந்தனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த உல்பத் உசேன், கடந்த 1999 முதல் 2000 வரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதப் பயிற்சி பெற்றார். மொராதாபாத் திரும்பிய பிறகு, அவர் ஒரு பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டார்.
உல்பத் உசேன் முதன்முதலில் ஜூலை 9, 2001 அன்று கைது செய்யப்பட்டார். அன்றைய தினம் அவரிடமிருந்து ஒரு ஏகே-47, ஒரு ஏகே-56, இரண்டு 30-போர் பிஸ்டல்கள், 12 கைக்குண்டுகள், 39 டைமர்கள், 50 டெட்டனேட்டர்கள், 37 பேட்டரிகள், 29 கிலோ வெடிபொருட்கள், 560 லைவ் கார்ட்ரிட்ஜ்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. இந்த நிலையில் கடந்த 18 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஹிஸ்புல் பயங்கரவாதி உல்பத் உசேன் தற்போது கைது செய்யப்பட்டான்’ என்றனர்.