தீவிர இந்துவாக தான் ஜெயலலிதா வாழ்ந்தார்: அண்ணாமலையை தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கக்கூடிய தேர்தலாக இருக்கும். ஜெயலலிதா ஒரு சிறந்த இந்துத்துவாதியாக இருந்து உள்ளார். பல கோயில்களுக்கு ஜெயலலிதா புனரமைப்பு செய்து கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளார். ஒரு தீவிர இந்துவாக தான் ஜெயலலிதா வாழ்ந்து உள்ளார். பாரதிய ஜனதா கட்சி திருவள்ளுவரை போற்றுகிறது. பாஜ தேர்தல் அறிக்கையிலும் உலகம் முழுவதும் திருவள்ளுவர் குறித்தான கலாச்சாரங்களை விழிப்புணர்வு ஏற்படுத்தி தரப்படும் என மோடி வாக்குறுதி கொடுத்துள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ஏற்கனவே அளித்த பேட்டியில் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை, தமிழ்நாட்டில் எல்லோரையும் விட உயர்ந்த இந்துத்துவா தலைவராகவே இருந்தார் என்று கூறியிருந்தார். இதற்கு அதிமுக தலைவர்கள், சசிகலா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இப்போது ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும் ெஜயலலிதா தீவிர இந்துவாக வாழ்ந்ததாகக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.