இந்து முன்னணி நிர்வாகிக்கு நிபந்தனை ஜாமீன்
11:31 AM Mar 01, 2024 IST
மதுரை: ஆஞ்சநேயர் கோயிலில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட பெண் காவலரிடம், உள்ளாடையை கழற்றிக் காட்டி தகராறு செய்த வழக்கில் கைதான இந்து முன்னணி மாவட்ட செயலாளர் குபேந்திரனுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ஜாமீன் வழங்கியது. எதிர்காலத்தில் காவல்துறையினருக்கு எதிரான எந்த அவமரியாதையும் செய்ய மாட்டேன் என உறுதி மொழிப்பத்திரம் அளித்ததால் நிபந்தனை ஜாமீன் வழங்கியது