"50 கோடி பேர் மட்டும் இந்தி பேசுகிறார்கள்" : வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்தியாவிற்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு!!
மாஸ்கோ : இந்தியாவில் அனைவரும் இந்தி பேசுவதில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். சுமார் 4 ஆண்டுகளுக்குப் பின், இரண்டு நாள் அரசுமுறை பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா–ரஷ்யா 23வது உச்சி மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் புதினும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.இதைத் தொடர்ந்துஉக்ரைன் போர் நிறுத்தப் பிரச்சினை குறித்து ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேசியிருந்தார்.
இந்த நிலையில் இந்தியாவின் மொழி, கலாச்சாரம் குறித்து பேசியுள்ள அதிபர் புடின், "நான் சில தினங்களுக்கு முன் இந்தியா சென்றேன், சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் அனைவரும் இந்தி பேசுவதில்லை, 50-60 கோடி மக்களைத் தவிர பிறர் வெவ்வேறு மொழிகள் பேசுகின்றனர். இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது அவசியம். இந்தியாவின் கலாசாரம் பாராட்டுதலுக்குரியது. இவ்வாறு இந்திய வருகை குறித்து புடின் பேசி உள்ளார். பிரதமர் மோடி உடனான விரிவான பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் புடின் பாராட்டி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.