இமாச்சல பிரதேசத்தின் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழப்பு!
சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 பேர் பயணித்த நிலையில் மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மலைப்பாதையில் சென்றபோது ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக பேருந்தின் மீது பாறைகள், மண் சரிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் பிரதமர் மோடி நிதியுதவி அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement